Feb 18, 2025 - 10:05 AM -
0
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பம், மனித உடலால் உணரப்படும் 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.