கிழக்கு
சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருளை கொண்டுச்சென்ற மனைவி

Feb 18, 2025 - 07:17 PM -

0

சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருளை கொண்டுச்சென்ற மனைவி

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் ஒரு கிராம் ஐஸ் போதபை்பொருளை சூட்சுமமாக மறைத்து கொண்டு சென்ற 27 வயதுடைய பெண்ணொருவரை இன்று 18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு மாதத்துக்கு முன்னர் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சம்பவதினமான இன்று (18) பகல் 12.30 மணிக்கு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலைகளை மனைவி எடுத்துச் சென்ற நிலையில் அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது புகையிலைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவர் ஓட்டுமாவடி 3 ஆம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் எனவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05