வடக்கு
கடலாமையுடன் ஒருவர் கைது

Feb 18, 2025 - 09:12 PM -

0

கடலாமையுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் இறால் வளர்ப்புத்திட்டம் பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 30 கிலோ நிறையுடைய கடலாமை உயிருடனும் 20 கிலோகிராம் கடலாமை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05