உலகம்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புதல்

Feb 19, 2025 - 07:09 AM -

0

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புதல்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு பாலமாக செயல்படுவதற்கு கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ சாவஸ் ரோபல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 200 பேர் கொண்ட முதல் குழுவானது இன்று (19) ஜூவான் சாண்டரியா சர்வதேச விமான நிலையத்தினை வந்தடையும். 

குறித்த அனைவரையும் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கு கோஸ்டாரிகா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் சொந்த நாடுகளை அடைவதற்கான பாலமாக கோஸ்டாரிகா செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 332 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05