உலகம்
ட்ரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்

Feb 19, 2025 - 09:45 AM -

0

ட்ரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு வருவதை கண்டித்து அமெரிக்க மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த வருடம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே எலான் மஸ்க் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும், குறிப்பாக அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க, பல நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதிகளை நிறுத்தி வருகிறார் என்பதன் தெரிந்தது. 

இந்த நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திடீரென வீதியில் இறங்கி, கோஷமிட்டு பதாகைகள் ஏந்தி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக திடீரென தலைநகர் வொஷிங்டனில் உள்ள பாராளுமன்ற வளாகம் வெளியே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments
0

MOST READ