வணிகம்
கொம்பேங்க் டிஜிட்டல் IPO தீர்வுகளுக்காக CSEயின் மத்திய பணவைப்பு முறைமையுடன் ஒருங்கிணைகிறது

Feb 19, 2025 - 01:49 PM -

0

கொம்பேங்க் டிஜிட்டல் IPO தீர்வுகளுக்காக CSEயின் மத்திய பணவைப்பு முறைமையுடன் ஒருங்கிணைகிறது

கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கி தளமான கொம்பேங்க் டிஜிட்டல் (ComBank Digital) ஆனது தற்போது கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) மத்திய பணவைப்பு முறைமையுடன் (CDS) இணைக்கப்பட்டுள்ளதாகவும் இது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து நேரடியாக ஆரம்ப பொது வழங்கல் வெளியீடு (IPO) தீர்வுகளை மேற்கொள்ள உதவும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது. 

LankaPay அரசாங்க கொடுப்பனவு தளத்துடன் (LPOPP) CDS இன் ஒருங்கிணைப்பு சாத்தியமானதால் இந்த அம்சம் தற்போது கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஆரம்ப பொது வழங்கல்களில் பங்கேற்பதை எளிதாக்குகிறது. 

IPO மூலம் வழங்கப்படும் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பானது ComBank Digital க்கு முக்கியமான மேலதிக சேவையாகும், மேலும் தங்கள் முதலீடுகளை பன்முகப்படுத்த விரும்பும் எங்கள் வாடிக்கையாளர்களை இது வரவேற்கிறது' என்று கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியின் உதவி பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச தெரிவித்தார். 'இது தளத்தின் பன்முகத்தன்மையை மேலும் மேம்படுத்துவதுடன் மற்றும் பங்கு உரிமையை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதை ஆதரிப்பதால் இது ஒரு முக்கியமான தேசிய அம்சமாக திகழ்கிறது. 

ComBank Digital இன் இந்த சமீபத்திய அம்சம் குறித்து, LankaPay இன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.தினுக பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், CSE வழியாக LankaPay அரசாங்க கொடுப்பனவு தளத்திற்கு இணையத்தளம் மூலம் பணம் செலுத்துவதற்கு நாம் கொமர்ஷல் வங்கியுடன் இணைந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியளிப்பதுடன் குறைந்த பணத்துடன் கூடிய சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. ComBank Digital இனை எங்களின் பங்குதாரராகக் கொண்டு, CDS இன் ஒருங்கிணைப்பானது கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் CSE செயல்பாடுகளுக்கும் மகத்தான பெறுமதியை சேர்க்கும் அதே வேளை இது பொருளாதாரத்தின் திறமையான செயல்பாட்டை மேம்படுத்தும். மேசை கணினிகள், மடி கணினிகள், டப்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற அனைத்துச் சாதனங்களிலும் பதிலளிக்கக்கூடிய இணையப் பயன்பாடு மற்றும் மூன்று சொந்த மொபைல் பயன்பாடுகள் (ios, Android மற்றும் Huawei) வழியாக கொம்பேங்க் டிஜிட்டல் செயற்படுத்தப்படுகிறது. 

கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100மூ கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05