வணிகம்
அதானி, இந்தியாவின் மிகப்பெரிய ‘Skill and Employ’ திட்ட உருவாக்கம் மூலம் ‘Make in India’வை ஆதரிக்கவுள்ளது

Feb 19, 2025 - 01:54 PM -

0

 அதானி, இந்தியாவின் மிகப்பெரிய ‘Skill and Employ’ திட்ட உருவாக்கம் மூலம்  ‘Make in India’வை ஆதரிக்கவுள்ளது

அதானி குழுமத் தலைவரான கௌதம் அதானியின் சமூகக் கொள்கையான सेवा साधना है, सेवा प्रार्थना है और सेवा ही परमात्मा है இற்கு இணங்க பசுமை எரிசக்தி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம், திட்டச் சிறப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேர்ச்சி பெற்ற திறமைகளை உருவாக்க சிங்கப்பூரின் ITE கல்வி சேவைகள் (ITEES) உடன் அதானி குழுமம் கைகோர்த்துள்ளது. சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட சிறந்த பாடசாலைகளை நிறுவி தொழில்துறைக்கு தயாராகும் இந்தத் திறமையாளர் குழுவை உருவாக்க அதானி குடும்பம் INR 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும். 

Adani Global Skills Academy என்று அழைக்கப்படும் இந்த நிறைவுப் பாடசாலைகள், இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை அவர்களின் தொழில்துறை மற்றும் இலட்சியங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கும். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்வித் துறையில் சான்றிதழ் பெற்றவுடன் அவர்களின் பயிற்சித் துறையைப் பொறுத்து, அதானி குழுமத்திலும் பரந்த தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இது பயிற்சி பெற்ற வல்லுநர்கள் உலகளாவிய சிறந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயற்படுவதையும் முதல் நாளிலிருந்தே தொழிலுக்குத் தயாராக இருப்பதையும் உறுதி செய்யும். 

ஆரம்ப கட்டமாக குஜராத்தின் முந்த்ராவில் தொழில்நுட்பப் பயிற்சிக்கான உலகின் மிகப்பெரிய நிறைவுப் பள்ளியை நிறுவுவதற்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கும். இது வருடாந்தம் 25,000இற்கும் மேற்பட்ட மாணவர்களை பல்வேறு தொழில் மற்றும் சேவைப் பணிகளுக்குத் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இம் மாணவர்கள் புதிய பட்டதாரிகளாகவும், ITIக்கள் அல்லது Polytechnics கல்லூரிகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளைக் கொண்ட டிப்ளோமா பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் பாடசாலைக்குள் தீவிர bootcamp அனுபவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

The Adani Global Skills Academy, அதிவேக கற்றல் அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய இடமாக விளங்கும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான வதிவிட வசதிகளை வழங்குவதுடன் புதுமை மையங்கள் மற்றும் AI- அடிப்படையிலான simulators உடனான mixed reality அடிப்படையிலான கற்றலை இது வழங்கும். 

உயர்தர கற்றல் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, அதானி நிறுவனம் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சியை வழங்குவதில் உலகத் தலைவராகவும், தேசிய தொழில் திறன் சான்றிதழ் மற்றும் தரநிலைகளின் முக்கிய உருவாக்குனருமான ITEES சிங்கப்பூருடன் இணைந்துள்ளது. 

தொழில்நுட்பத் தகுதியுடன் தொழில்துறைக்கு தயாராக உள்ள திறமையாளர்களுக்கு தொடர்ச்சியான ஊக்கத்தை வழங்குவதில் ITEES சிங்கப்பூர் ஒரு அறிவுத் துணையாகச் செயற்படும். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, அதிவேக தொழில்நுட்ப உள்ளடக்கம் மற்றும் புதிய யுகத் தொழில்துறைகளில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற முன்னணி ஆசிரியர்களின் நியமனம் ஆகியவற்றை வழங்கி சிறந்த கற்றல் அனுபவத்தை உருவாக்க இந்த இணைவு உதவும். 

ஒரு குழுமமாக உயர் மட்ட தொழில்நுட்ப திறமையை உருவாக்கும் எங்கள் முன்முயற்சிக்கு இந்த இணைவு மிகவும் முக்கியமானது. இந்த இணைவு, எங்கள் சேவைத்தொகுதி முழுவதும் Make-in-India கொள்கையை செயற்படுத்தும் உறுதிப்பாட்டிற்கு ஏற்புடையதாக உள்ளது. கல்வித் தர உறுதி, சான்றிதழ் சார்ந்த கற்றல் பாதைகள், ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் ஆழமான ஈடுபாட்டுடன் இந்த இணைவு பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களை ஆதரிக்க சிறந்த பயன்பாடு சார்ந்த கற்றலை உட்பொதித்து, விக்சித் பாரதத்திற்கு பங்களிக்கும். என அதானி திறன்கள் மற்றும் கல்வியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரொபின் பௌமிக் தெரிவித்தார். 

“அதானியுடன் இணைந்து திறன் கல்வி மற்றும் பயிற்சியில் ITEஇன் நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் ITEES மகிழ்ச்சியடைகிறது. இந்த அர்த்தமுள்ள இணைவு மூலம், ITEES திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதையும் கல்வி மற்றும் வாழ்க்கையை மாற்றுவதன் மூலம் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. என சிங்கப்பூர் ITEES இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுரேஷ் நடராஜன் கூறினார். 

பல ஆண்டுகளாக, தொழில்நுட்பக் கல்வியில் அதன் முன்னோடி மாற்றத்திற்காக ITEES பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இதில் 2011ஆம் ஆண்டில் சிறப்புப் பாராட்டுடன் சிங்கப்பூர் தர விருதை வென்ற முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமையும் அடங்கும். 

அதானி குழுமம் தொடர்பாக 

இந்தியாவின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமம், இந்தியாவில் பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். எரிசக்தி மற்றும் பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் logistics (துறைமுகங்கள், விமான நிலையங்கள், கப்பல் போக்குவரத்து, சாலைகள் மற்றும் புகையிரதம் உட்பட), உலோகங்கள் மற்றும் நுகர்வோர் துறை ஆகியவற்றில் விஸ்தரித்து, அதானி குழுமம் சந்தையில் தலைமைத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது.. அதானி நிறுவனம் தனது வெற்றிக்கும் தலைமைத்துவத்திற்கும், நிலையான வளர்ச்சிக்கான வழிகாட்டும் கொள்கையான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நன்மையுடனான வளர்ச்சி ஆகிய கொள்கைகளே காரணம் என நம்புகிறது. நிலைத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் குழு உறுதிபூண்டுள்ளது. 

For more information visit: www.adani.com 

For media queries, contact Roy Paul: roy.paul@adani.com 

ITEES சிங்கப்பூர் தொடர்பாக 

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ITE), 1992ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் கீழ் இரண்டாம் நிலைக் கல்விக்கு பின்னரான கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது. இது தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் முதன்மை வழங்குநராகவும், சிங்கப்பூரின் பணியாளர் போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் தேசிய தொழில்திறன் சான்றிதழ் மற்றும் தரநிலைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாகவும் உள்ளது. அதன் ஆலோசனைப் பிரிவான ITE கல்வி சேவைகள் (ITEES) மூலம், ITE உலகளாவிய திறன் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை செய்துள்ளதுடன் அதன் திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

ITE இன் முழுமையான துணை நிறுவனமான ITEES, சர்வதேச சமூகத்துடன் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில் ITE இன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05