Feb 19, 2025 - 03:26 PM -
0
வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறையில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன.
இதன்போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 இற்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன.
--