செய்திகள்
அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய பிரிவு

Feb 20, 2025 - 07:51 AM -

0

அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய பிரிவு

பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஊழலைத் தடுப்பதும், அரச நிறுவனத்திற்குள் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும், நெறிமுறை நிர்வாகத்தை ஊக்குவிப்பதும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட அமுலாக்கத்தில் உதவுவதும் இந்த பிரிவை நிறுவுவதற்கான முதன்மை நோக்கமாகும். 

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவு ஒரு சிறப்புப் பிரிவாக நிறுவப்பட வேண்டும் என்றும், அதன் ஆரம்ப கட்டமாக, அனைத்து அமைச்சரவை அமைச்சுகள், மாகாண தலைமைச் செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களிலும் இது நிறுவப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இந்த உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05