செய்திகள்
மேலும் இரு சந்தேகநபர்கள் நாட்டுக்கு

Feb 20, 2025 - 09:05 AM -

0

மேலும் இரு சந்தேகநபர்கள் நாட்டுக்கு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்து தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகரவுடன் இந்தியாவில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்த ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் இன்று(20) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றொரு சந்தேக நபரும் நேற்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். 

இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட அரோஷன் மதுஷங்க என்ற சந்தேக நபர் சன்ஷைன் சுத்தாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், இராணுவக் கமாண்டோ படையிலிருந்து தப்பித்து இந்தியாவில் மறைந்திருந்த சிவா என்ற எரங்க புஷ்பகுமார ஹெட்டியாராச்சியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். 

தென் மாகாணத்தில் நடந்த பல கொலைகளில் அவர் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சென்னையில் பேருந்தில் பயணம் செய்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். 

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்டர்போலின் உதவியுடன் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05