Feb 20, 2025 - 11:14 AM -
0
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக நிதி வருவாயை உயர்த்துவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் (Fitch Ratings) தெரிவித்துள்ளது.
இந்த அணுகுமுறை வெற்றி பெற்றால், இறையாண்மையின் கடன் விபரத்தில் நீண்டகாலமாக நிலவும் பலவீனத்தைத் தணிக்கும் என்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் (Fitch Ratings) குறிப்பிட்டுள்ளது.
எனினும், நிதிக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளன, மேலும் நிதி ஒருங்கிணைப்பின் வேகத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் நடுத்தர காலத்தில் கடன் குறைப்புக்கான வாய்ப்புகளை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

