செய்திகள்
கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Feb 20, 2025 - 01:07 PM -

0

கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

முகமாலை வடக்கு ஏ9 வீதியில் வியாபார நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் செ. நாகசெல்வம் என்பவரது கடை மீது இனம் தெரியாத நபர்களால் நேற்று (19) நள்ளிரவு 12.30 மணி அளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறிந்த கடையின் மீது 2020 ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், நேற்று இரவு மூன்றாவது தடவையாக குறித்த கடை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

இது தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05