Feb 20, 2025 - 01:19 PM -
0
சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவி நியமன தெரிவுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தலைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி கே.எம்.எஸ் திசாநாயக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

