Feb 20, 2025 - 02:29 PM -
0
ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
இந்த போட்டியானது டுபாயில் இன்று நடைபெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.