சினிமா
விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை!

Feb 21, 2025 - 06:07 PM -

0

விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை!

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை நேஹா கௌடா, இந்த சீரியல் மூலம் பிரபலம் ஆன இவர் அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் தொடரில் நடித்தார், தொடர்ந்து பல ஹிட் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். 

அதில் சமீபத்தில் அவருடைய சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்து பேசியுள்ளார், அதாவது எனக்கு 4 வயது இருக்கும் போது ஒரு மோசமான சம்பவத்தை நான் சந்தித்தேன், நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன், என்னுடைய அம்மா அப்போது வீட்டில் இல்லை என்னுடைய பாட்டி தான் இருந்தாங்க, நான் கண் விழிச்சு பார்த்த போது பாட்டி வீட்டில் இல்லை, அதனால் அவுங்களை தேடி நான் வெளியே சென்றேன், அப்போது பக்கத்து தெருவில் இருந்த ஒருத்தன் உன்னுடைய அப்பா எனக்கு தெரியும் என்று சொன்னான், அதன் பிறகு உனக்கு வாட்ச் வாங்கி தருகிறேன் என்று சொல்லி என்ன கூட்டிட்டு போனான். 

ஒரு வாட்ச் கடைக்கு உள்ளே சென்று கதவை பூட்டி வைத்து என்னை மிரட்டினான், அப்போ எனக்கு அங்க என்ன நடந்துச்சுனு சொல்ல கூட தெரியல, நான் ரொம்ப அழுதேன், அவன் கத்திய காட்டி மிரட்டி அடித்தான், அப்பறம் அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வீட்டிற்கு சென்றேன், வீட்ல அவன் என்னை அடிச்சத சொன்னேன், வேற ஏதும் எனக்கு சொல்ல தெரியல, சில வருடம் கழிச்சு என்னோட டீச்சர் ஒருத்தங்க பேட் டச் குட் டச் சொல்லி கொடுக்கும் போது தான் எனக்கு தெரிஞ்சது, உடனே அங்கேயே பயங்கரமா அழுதேன் என அந்த பேட்டியில் நேஹா கௌடா தெரிவித்திருப்பார். 

மேலும் அந்த கசப்பான நாளை நினைத்தால் இன்னும் பயமாக உள்ளது என கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05