Feb 22, 2025 - 08:24 AM -
0
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் அடங்கும். அவை ஒவ்வொன்றிற்குமான இன்றைய நாளுக்குரிய பலாபலன்களை இங்கே காண்போம்.
அஸ்வினி : கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
பரணி : சுணக்கமான வேலைகளைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள்.
கார்த்திகை : புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
ரோகிணி : காரிய வெற்றிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : அலுவலகப் பணிகளை முடிக்க இயலாமல் டென்ஷனாவீர்கள்.
திருவாதிரை : எதிரிகளால் இடையூறாக இருந்த தொல்லைகள் விலகும்.
புனர்பூசம் : குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.
பூசம் : பெண்கள் மனதில் நினைத்த காரியம் நடந்தேறும்.
ஆயில்யம் : வேலைத் திறத்தால் உயர்ந்த பதவி உங்களைத் தேடி வரும்.
மகம் : பிள்ளைகளின் அறிவுத்திறனை பார்த்து நீங்கள் ஆனந்தப்படுவீர்கள்.
பூரம் : வர வேண்டிய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்திரம் : கொடுக்கல்-வாங்கலில் பெண்களே உஷாராக இருங்கள்.
அஸ்தம் : எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.
சித்திரை : தனியார்துறை ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
சுவாதி : வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
விசாகம் : பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
அனுஷம் : தொழில் முதலீடுகளுக்கான பணம் கைக்கு வந்து சேரும்.
கேட்டை : வீடு கட்டுவதற்கான மனை இடத்தை வாங்குவீர்கள்.
மூலம் : நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு உங்களைத் தேடி வரும்.
பூராடம் : உங்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த நோய் விலகும்.
உத்திராடம் : கலைத்துறையில் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும்.
திருவோணம் : ஒரு காரியத்தில் இழுபறியான நிலை ஏற்படும்.
அவிட்டம் : ஆன்லைன் வியாபாரத்தை அமோகமாக நடத்துவீர்கள்.
சதயம் : அதிகாரிகளின் கருத்துக்கு முரண்பாடாக நடந்து கொள்ளாதீர்கள்.
பூரட்டாதி : வாடிக்கையாளர்களை ஈர்த்து வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள்.
உத்திரட்டாதி : சகோதர சகோதரிகளால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும்.
ரேவதி : மனதில் ஆன்மீக நாட்டம் மேலோங்கி தெய்வபக்தி அதிகரிக்கும்.