சினிமா
மாதம்பட்டி ரங்கராஜூக்கு 2 ஆவது திருமணம்?

Feb 22, 2025 - 10:15 AM -

0

மாதம்பட்டி ரங்கராஜூக்கு 2 ஆவது திருமணம்?

குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் இதற்கு முன் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். 

பிரபல சமையல் கலைஞரான அவர் பல சினிமா நட்சத்திரங்களின் வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் காதலர் தினத்தை கொண்டாடியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். ஜாய் ஏற்க்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். 

மேலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் சில ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ஜாய் கிரிஸில்டா போன் வால்பேப்பர் கூட அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோ தான் இருக்கிறது என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

அவரை தான் மாதம்பட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05