செய்திகள்
அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

Feb 22, 2025 - 06:06 PM -

0

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக அர்ஜுன் அலோசியஸும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் கடந்த ஒக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அதன்படி, தண்டனை காலம் முடிந்த பின்னர் இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05