செய்திகள்
தேயிலைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

Feb 23, 2025 - 10:48 AM -

0

தேயிலைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

தேயிலைத் தொழிலை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 

அதன்படி, சிறு தேயிலைத் தோட்டங்களுக்கான பயிர்செய்கையை மீண்டும் தொடங்குவதற்காக முதற்கட்டமாக 34.5 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டமாக 17.5 மில்லியன் ரூபாவும் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு மறு பயிர்செய்கைக்காக நிலுவைத் தொகை செலுத்துவதற்காக 22.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதிய நிலங்களில் புதிய பயிர்களை பயிரிடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பயிர்செய்கைக்காக 27.42 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05