Feb 23, 2025 - 11:57 AM -
0
மகாவலி குடியிருப்பில் வசித்துவரும் குறைந்த வருமானம் பெறும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, 15 இலட்சம் மீன் குஞ்சுகளை மகாவலி சீ வலயத்தில் உள்ள 10 வாவிகளுக்கு விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாவலி சீ வலயத்திற்கு அண்மித்து வாழும் ஹேனா நிகல, ரத்கிந்த, அலுயடவல, பெலன்கஸ் வாவி, பரகஸ் வாவி, உல்பத் வாவி, வீரலந்த வாவி, மில்தெணிய வாவி மற்றும் காசன் வாவி ஆகிய இடங்களிலும் இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
இதன் நோக்கங்களில் ஒன்று, குறித்த வாவிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த வாவிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் 687 பேர் ஈடுபட்டுள்ளனர், மேலும் இவற்றைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3,500 ஆகும்.
குறித்த மீன் குஞ்சுகளின் விடுவிப்பு திட்டத்திற்காக மகாவலி சீ வலயத்தின் வதிவிட வணிக முகாமையாளர் எச்.எம்.ஆர் ஹேரத் மற்றும் மகாவலி விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட மகாவலி அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர்.