சினிமா
ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்

Feb 23, 2025 - 12:58 PM -

0

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்

நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வரும் அஜித்குமார் கடந்த சில தினங்களாக கார் ரேசில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

சமீபத்தில் டுபாயில் நடந்த கார் ரேசில் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தைப் பிடித்தது. இந்த ரேசில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார். 

இந்நிலையில், ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்றார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேசில் பங்கேற்றார். 

ரேசின் போது குறுக்கே வந்த ஒரு காரால் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் 3 முறை பல்டியடித்தது. ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கார் ரேசில் விபத்தில் சிக்கிய அஜித்குமார் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது தரப்பினர், இந்த ரேசில் அஜித்குமார் 14ஆவது இடம் பிடித்தார் என தெரிவித்தனர்.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05