Feb 23, 2025 - 03:23 PM -
0
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரிக்கு இடையிலான 62 ஆவது ‘Battle of the Brothers’ வருடாந்த கிரிக்கெட் போட்டியில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் கொழும்பு இசிபதன கல்லூரி அணி, முதலாவது இன்னிங்ஸிற்காக 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இசிபதன கல்லூரி அணி 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர், 54 என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.