சினிமா
விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன் - வாய் திறந்த இயக்குனர்

Feb 23, 2025 - 03:54 PM -

0

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன் - வாய் திறந்த இயக்குனர்

கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது. 

அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இடையில் இவர் சில நடிகர்களோடு காதலில் உள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த ஒரு நேர்காணலில் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஷால் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் "விஷாலின் அப்பா, கீர்த்தி சுரேஷை விஷாலுக்காக பெண் கேட்க சொன்னார், நான் இது சம்மந்தமாக கீர்த்தி சுரேஷிடம் பேசியபோதுதான் தன்னுடைய நீண்ட கால காதல் பற்றி அவர் சொன்னார். அந்த பையனைதான் இப்போது அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். கீர்த்தியின் வெற்றிக்கு அந்த பையன் முக்கியக் காரணம்" எனக் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05