Feb 23, 2025 - 04:47 PM -
0
மலையகத்தில் உள்ள கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழாவினை இந்து கலாசார புத்தசாசன அமைச்சின் ஊடாக கலந்துரையாடி இந்த கௌரவிப்பு விழாவினை அரசவிழாவாக மலையகத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பெருந்தோட்டம் மற்றும் உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்று (23) இடம்பெற்ற சிற்ப செதுக்கள் ஒவிய கலைஞர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்களின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் வசந்த மூர்த்தி, அமைச்சின் ஊடகசெயலாளர் அஜித்குமார் அதிபர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையகத்திற்கு அரசியல் மாற்றமென்பது முக்கியமானது. அந்த மாற்றம் தற்போது நிறைவேறியிருக்கிறது. இரத்தினபுரி மாவட்டம் என்பது கடந்த காலங்களில் அரசியலில் அநாதையாக்கப்பட்டு புறக்கனிக்கப்பட்ட ஒரு மாவட்டம். மலையகத்திற்கென எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகைளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
மலையக பெருந்தோட்ட மக்கள் 14 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த அனைத்து மாவட்டங்களிலும் வாழுகின்ற மக்களை நாம் சமரீதியாக பார்க்க வேண்டியுள்ளதோடு அம்மக்களுக்கான வாய்ப்பினை வழங்கவேண்டும். தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவேண்டியது எமது முக்கிய கடப்படாக உள்ளது. மாத்தறை மாவட்டத்தில் தெனியாய என்ற பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களின் கலாசாரம், மொழி என்பவற்றை இழந்து வாழகூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் மொழியினை கூட கற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வியின் ஊடாகத்தான் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அப்பகுதி மக்களின் பிள்ளைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தமிழ் மொழி ஊடாக கல்வியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
200 வருட மலையகத்தின் வரலாற்றை கொண்ட தமிழ் மக்களாகிய நாம், ஏனைய சமுகங்களை ஒப்பிடுகின்ற போது பல வருடங்கலாக நாம் பின்னோக்கியிருக்கின்றோம். இதனை நாம் எவ்வாறு சீர் செய்வது கடந்த கால ஆட்சியாளர்களை குறைக்கூறிக் கொண்டிருக்க முடியாது. மலையகத்தில் உள்ள அனைத்து அரசியலில் பிரதநிதிகளுக்கு நாம் அழைப்பு விடுகிறோம். எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசானது மக்களின் அரசு. இது உழைக்கும் மக்களின் அரசு. ஆகவே உழைக்கும் மக்களின் குறைகளை கண்டறிந்துள்ளது வெகுவிரைவில் மக்களின் பிரச்சினைகள் கட்டகட்டமாக தீர்க்கப்படும். மலையக மக்களின் வாழ்க்கையினை உயர்த்துவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்விக்கு நாங்கள் முன்னுரிமையினை வழங்குகின்றோம் அதில் மலையக பாடசாலைகளுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை எமது அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
--