Feb 23, 2025 - 07:01 PM -
0
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (23) இடம்பெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கு எதிராக ஒரு மோசமான சாதனை பதிவாகியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சைத் தொடங்கிய ஷமி, முதல் ஓவரில் மாத்திரம் 11 பந்துகளை வீசியுள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் இது இரண்டாவது மிக நீண்ட ஓவராகக் கருதப்படுகிறது.
குறித்த பட்டியலில் பங்களாதேஷ் பந்து வீச்சாளர் ஹசிபுல் ஹொசைன் மற்றும் சிம்பாப்வே வீரர் டினாஷே பன்யங்காரா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
அவர்கள் இருவரும் ஒரு ஓவரில் 13 பந்துகளை வீசியுள்ளனர்.
மேலும், இன்று ஷமி வீசிய இந்த ஓவர் சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் ஒரு இந்தியர் வீசிய மிக நீண்ட ஓவராக கருதப்படுகிறது.
ஷமி இந்தப் பந்து வீச்சின் ஊடாக, ஒரு ஓவரை முடிக்க அதிக பந்துகளை வீசிய இந்திய பந்து வீச்சாளர் பட்டியலுக்குள் இணைந்துக்கொண்டுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் சார்பாக சயீர் கான், இர்பான் பதான் ஆகியோரும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
2004 ஆசியக் கிண்ண தொடரில் பாகிஸ்தானின் மொஹமட் சாமி வீசிய 17 பந்து பந்துதான் உலகின் மிக நீண்ட ஓவராகக் கருதப்படுகிறது.
அந்த ஓவரில் 7 வைட்டுக்களும் 4 நோ போல்களும் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.