Feb 24, 2025 - 08:45 AM -
0
எஹலியகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாதையைக் கடந்துக்கொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் குறித்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாப எஹலியகொடை பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபர் 68 வயதுடைய ஹூலகஸ்தலுவ, எஹலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்துக்கு பின்னர் பேருந்து சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.