Feb 24, 2025 - 10:44 AM -
0
இராமேஸ்வரம் மீன்பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீன்பிடி விசைபடகுகளையும், அதிலிருந்த 32 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (24) அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இன்று முதல் இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் போராட்டம் குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
--