Feb 24, 2025 - 01:14 PM -
0
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் நானி நடித்து வருகிறார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் திகதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
பொலிஸ் கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது. ஆனால் இடையில் அவர் உண்மையில் பொலிஸ் தானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
எல்லாரும் பொய்யை நம்பினார்கள் என நானி காதாபாத்திரம் கூறுவது அதற்கு உதாரணம்.
இறுதியில் ஒருவரை இரண்டு துண்டாக நானி கிழிக்கும் காட்சி அதிரவைக்கிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.