செய்திகள்
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டார நியமனம்

Feb 24, 2025 - 06:46 PM -

0

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டார நியமனம்

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டாரவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அனுருத்த லொகுஹபுவாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். 

சிரேஷ்ட ஊடகவியலாளரான சந்தன சூரியபண்டார 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் ஊடகத் துறையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளார். 

ஊடகத் துறையில் ஆழமான அறிவு மற்றும் சிறப்பான தொடர்பாளராக பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள அவர் ஒரு எழுத்தாளருமாவார். 

உள்ளூர் ஊடக புகைப்படவியலில் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றிய அனுருத்த லொகுஹபுவாரச்சி, சர்வதேச ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையில் சுமார் இரண்டு தசாப்தங்களாக பணியாற்றியவர். அவர் இலங்கையில் செய்தித்தாள் கலையில் டிஜிட்டல் புகைப்படவியலை அறிமுகப்படுத்தினார். அவர் புகைப்படவியல் மற்றும் டிஜிட்டல் புகைப்படவியலில் கௌரவ பட்டதாரியாவார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05