செய்திகள்
5 மாகாணங்களை உள்ளடக்கிய சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள்

Feb 24, 2025 - 08:31 PM -

0

 5 மாகாணங்களை உள்ளடக்கிய சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள்

தற்போது இலங்கை பொலிஸ் 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார்.


இன்று (24) தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஏனைய மாகாணங்களையும் சேர்த்து மொத்தம் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இது தொடர்பான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.


அதேபோல், தற்போது பொலிஸ் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


அதன் கீழ் சைபர் குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று இயங்குவதாகவும் அவர் கூறினார்.


மேலும், 5 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அம்பாறை, குருணாகலை, மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் பிராந்திய மட்டத்தில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலமும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


அதேபோல், இலங்கையில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் அந்தக் குற்றம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05