சினிமா
திருமணத்துக்கு பிறகு மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஸ்: நைட் பார்ட்டியில் குத்தாட்டம்

Feb 25, 2025 - 10:02 AM -

0

திருமணத்துக்கு பிறகு மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஸ்: நைட் பார்ட்டியில் குத்தாட்டம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 'பேபி ஜான்' படத்தின் மூலம் பொலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. 

கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பின் தனது கணவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பின் கணவருடன் நடத்திய பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதில் கிளாமர் உடையில், கணவர் மற்றும் நண்பர்களுடன் நடனமாடும் படங்களும் இருக்கிறது. திருமணத்துக்கு முன் வரை ஹோம்லியாக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், பொலிவுட் படத்தில் நடித்துவிட்டு, திருமணமும் செய்த பிறகு படு கவர்ச்சியான உடைகளை அணிகிறார். அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்கிறார் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05