சினிமா
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்த ஹீரோ!

Feb 25, 2025 - 11:06 AM -

0

வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்த ஹீரோ!

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வீடியோ எடுத்த ரசிகரின் கையடக்க தொலைபேசியை பறித்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த 'கருடன்' திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார். 

மேலும் சமீபத்திய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான 'மார்கோ' இவரை மிரட்டலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டியது. 'மார்கோ' பான் இந்தியா படத்தின் வெற்றியை தொடர்ந்து உன்னி முகுந்தன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'கெட் செட் பேபி' மலையாள படம். இப்படம் கடந்த 21ஆம் திகதி வெளிவந்தது. இந்த நிலையில், பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த நடிகர் உன்னி முகுந்தன் ரசிகரின் செயலால் கடுப்பாகி அவருடைய கையடக்க தொலைபேசியை பறித்துக் கொண்டார். தன் முகத்துக்கு முன் கையடக்க தொலைபேசியை வைத்து அந்த ரசிகர் வீடியோ எடுத்து வந்ததால் கடுப்பான உன்னி முகுந்தன் இப்படி செய்துள்ளார். 

குறித்த கையடக்க தொலைபேசியை பறித்துக்கொண்டு தனது சட்டை பையில் அவர் போட்டுக்கொண்டார். கடைசி வரை அதை ரசிகருக்கு திருப்பியே தரவில்லை. இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05