Feb 25, 2025 - 12:23 PM -
0
உலகின் முன்னணி காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற Allianz SE நிறுவனம், தனது பயணத்தில் மற்றுமொரு முக்கியத்துவமான சாதனை மைல்கல்லைக் குறிக்கும் வகையில் உலகளாவிய மகத்துவத்தில் 135 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. ஜேர்மனி மியூனிக் மாநகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள Allianz SE நிறுவனத்தில் 150,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகளவில் பணியாற்றி வருகின்றனர். சுமார் 70 நாடுகளில் இயங்கி வருகின்ற இந்நிறுவனம், உலகெங்கிலும் 125 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
சொத்து, ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி அடங்கலாக, பல வகைப்பட்ட தனிநபர் மற்றும் நிறுவன காப்புறுதிச் சேவைகளை அலியான்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருவதுடன், உதவிச் சேவைகள், கடன் காப்புறுதி மற்றும் உலகளாவிய வணிகத் தீர்வுகள் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றது. உலகளாவில் அலியான்ஸ் நிலைநாட்டியுள்ள நெகிழ்திறன், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மீதான அக்கறை ஆகிய அதே விழுமியங்களைக் கட்டிக்காத்தவாறு நம்பிக்கைமிக்க காப்புறுதித் தீர்வுகளை இலங்கையில் வழங்குவதிலும் 20 ஆண்டுகள் நிறைவை அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் இவ்வாண்டில் பெருமையுடன் கொண்டாடுகின்றது.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக (Interbrand தரப்படுத்தல் 2024ன் பிரகாரம்) உலகின் நம்பர் 1 காப்புறுதி நாமம் என்ற ரீதியிலும், நம்பர் 1 சர்வதேச காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ நாமம் (Brand Finance 2024ன் பிரகாரம்) என்ற ரீதியிலும், இச்சாதனையானது அலியான்ஸின் செழுமையான வரலாறு மற்றும் நெகிழ்திறன் மற்றும் நோக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. நிறுவனத்தின் நன்மதிப்பைத் தொடர்ந்தும் நிலைநாட்டியவாறு, தனது விழுமியங்களை உண்மையாகக் கட்டிக்காத்தவாறு, உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கேற்ப தன்னையும் மாற்றி, நிலைபெற்றுள்ள அலியான்ஸ் தனது வரலாற்றில் பல முக்கிய தருணங்களைக் கடந்து சிறப்பாகப் பயணித்து வருகின்றது.
அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான நாமத்தால் அழைக்கப்படுகின்ற, அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும்.

