Feb 25, 2025 - 12:42 PM -
0
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை பயன்படுத்தி பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார் தெரிவித்தார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், மக்கள் நம்பக்கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"2025 ஆம் ஆண்டில், மதிப்பிடப்பட்ட வருமானம் 4,990 பில்லியன் ரூபாயாக உள்ளது. வரி மூலம் 4,590 ரூபாய் வருமானமும், வரி அல்லாத வருமானமாக 370 பில்லியன் ரூபாயும், நன்கொடை மானியங்களாக 30 பில்லியன் ரூபாயும் எதிர்பார்க்கிறோம். அதேபோல், மதிப்பிடப்பட்ட செலவு 8,835 பில்லியன் ரூபாயாக உள்ளது. மீதியை நாங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களால் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை எவ்வாறு நிவர்த்தி செய்வது அல்லது இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து எதிர்க்கட்சியில் உள்ள எவரும் கவலைப்படத் தேவையில்லை."

