சினிமா
வாழ்நாள் கனவு நிறைவேறியது

Feb 25, 2025 - 03:03 PM -

0

வாழ்நாள் கனவு நிறைவேறியது

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன். இவர் பாலிவுட்டின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மோகனின் மகள். 

தமிழில் அவருக்கு அறிமுகம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'பேட்ட' படத்தில் கிடைத்தது. அதன் பின்னர் தமிழில் 'மாஸ்டர்', 'மாறன்' மற்றும் 'தங்கலான்' ஆகிய படங்களில் நடித்தார். 'தங்கலான்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. 

தற்போது அவர் பழம்பெரும் மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹ்ருதயபூர்வம்' எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் மோகன் லாலுடன் நடிப்பது குறித்து பேசியுள்ள அவர் "என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05