விளையாட்டு
இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?

Feb 25, 2025 - 03:29 PM -

0

இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?

நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு கலைந்துவிட்டது. 

இதே போல ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் டுபாயில் நடத்தப்படுகின்றன. இந்த ஹைபிரிட் மாடலால் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஏனைய அணிகள் பாகிஸ்தானில் இருந்து டுபாய் சென்று விளையாடி வருகின்றன. 

இந்நிலையில் இந்த ஹைபிரிட் மாடல் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக அமைவதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் "இந்திய அணி தனது எல்லாப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05