மலையகம்
தங்க பதக்கம் வென்ற லக்க்ஷன் விற்கின்ராஜாவுக்கு அமோக வரவேற்பு

Feb 25, 2025 - 04:17 PM -

0

தங்க பதக்கம் வென்ற லக்க்ஷன் விற்கின்ராஜாவுக்கு அமோக வரவேற்பு

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரின் பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையில் (SAAF Games 2025) சிரேஷ்ட பிரிவு ஆண்களுக்கான நகர்வல (Cross Country) ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தை வசிப்பிடமாகவும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவனுமான லக்க்ஷன் விற்கின்ராஜ் 10 கிலோமீற்றர் தூரத்தை 31 நிமிடங்கள் 56.38 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த லக்க்ஷன் கடந்த ஆறு வருட காலமாக இலங்கை இராணுவத்திற்காக தேசிய மெய்வளுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு வீரராவர். இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் கலந்து கொண்ட முதலாவது சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலவாக்கலைதேசிய கல்லூரியில் தரம் 01 தொடக்கம் உயர்தரம் வரை கல்வி பயின்று இந்த சாதனையின் ஊடாக தான் பிறந்த மிடில்டன் தோட்டத்திற்கும் மற்றும் தலவாக்கலை தேசிய கல்லூரி மற்றும் மலையகத்திற்கு மாத்திமன்றி இந்த நாட்டுக்கும் பெருமையினை சேர்த்துள்ளார். 

தலவாக்கலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வரவேற்பு ஊர்வலம் மிடில்டன் தோட்டம் வரை சென்றது. 

எனவே, இந்த சாதனை மன்னனுக்கு தோட்ட மக்களின் ஏற்பாட்டில் அமோக வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை, இவருடைய தாய் மற்றும் தந்தை ஆகியோர் தோட்ட தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05