Feb 25, 2025 - 04:44 PM -
0
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தொழுவ குருக்கலையில் உள்ள தி.மு.ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
149 மாணவர்கள் படிக்கும் இந்த ஆரம்ப பாடசாலையில் மதிய இடைவேளையின் போது குளவி கொட்டுதல் ஏற்பட்டுள்ளது .
அதே நேரத்தில், பாடசாலையை மூடுவதற்கு அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்,
இந்த குழந்தைகளை நோயாளர் காவு வாகனம் மற்றும் முச்சக்கரவண்டிகளில் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்கள்.
பாடசாலை மைதானத்தின் ஓரத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து இவ்வாறு மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த மாதத்தில் மாத்திரம் கம்பளையைச் சுற்றியுள்ள மூன்று பாடசாலைகளில் குளவி கொட்டியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், சுமார் 80 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை, உலப்பனை மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டியதைத் தொடர்ந்து 60 மாணவர்களும் பெற்றோர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும், இந்த மாதத்தில் மாத்திரம் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைப்பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் குளிர் காலநிலையால், இந்த குளவிகள் கலைந்து , பாடசாலை மாணவர்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களை தாக்குகின்றன.
இது குறித்து கவனம் செலுத்தி, இந்த துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.