செய்திகள்
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Feb 25, 2025 - 06:27 PM -

0

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம்  திகதி முதல் இன்று (25) வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.


இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.


இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05