செய்திகள்
மித்தெனிய முக்கொலை - மற்றுமொருவர் கைது

Feb 26, 2025 - 07:32 AM -

0

மித்தெனிய முக்கொலை - மற்றுமொருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று அந்த சந்தேக நபரை கைது செய்தது. 

இந்த சந்தேக நபர் மூக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 

அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். 

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர். 

இதன்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05