செய்திகள்
தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது

Feb 26, 2025 - 08:55 AM -

0

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது. 

வணிகர்கள் திவாலான தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என அதன் தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்தார். 

"நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது பட்ஜெட்டில் வைப்பதற்கான சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும்போது, ​​அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. 50 - 60 மணிநேரத்திற்கு OT செய்கிறார்கள். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம். அதற்கு மட்டும், நாங்கள் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம். அதனுடன் ETF, EPF மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, ​​சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது. அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, ​​தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது."

Comments
0

MOST READ
01
02
03
04
05