Feb 26, 2025 - 08:59 AM -
0
NDB வங்கியானது பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையை [[Affinity Credit Card] அறிமுகப்படுத்துவதற்காக பிஷப்ஸ் கல்லூரியுடன் இணைந்துள்ளது. NDB வங்கியானது இந்த பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிஷப்ஸ் கல்லூரியின் மதிப்பிற்குரிய பழைய மாணவர்கள், தற்போதைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் ஏராளமான நிதியியல் நன்மைகள் மற்றும் சலுகைகளை பெறவுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க பங்குடமைக்காக உத்தியோகபூர்வமாக கையொப்பமிடும் நிகழ்வானது ஜனவரி 29, 2025 அன்று NDB வங்கி மற்றும் பிஷப் கல்லூரியின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது, அதேவேளை பிஷப் கல்லூரியின் முக்கியமான 150 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிஷப் கல்லூரிக்கான பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையானது பாடசாலையின் சமூகத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது அட்டைதாரர்களுக்கு நிதி வசதி மற்றும் பிரத்தியேக பலன்களின் வரிசையை வழங்குகிறது. இதில், முதல் ஆண்டுக்கான வருடாந்த கட்டணத்திற்கு விலக்களிக்கப்படுவதுடன் , நெகிழ்வான தவணைக் கட்டணத் திட்டங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகப் பங்காளர்களிடமிருந்து சிறப்பு விலைக்கழிவுகள் மற்றும் PTA ஆல் ஏற்பாடு செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலதிகமாக , அட்டைதாரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட NDB வங்கியின் நிதியியல் தீர்வுகளின் தொகுப்பிற்கான அணுகலைப் பெறுவார்கள்.
இந்த பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கியின் உதவி துணைத்தலைவரும் , அட்டை நிலையத்தின் தலைவருமான அஷான் விக்கிரமநாயக்க “இந்த பிரத்தியேக கவர்ச்சிகர அட்டையை அறிமுகப்படுத்த பிஷப் கல்லூரியுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முன்முயற்சியானது, அவர்களின் உறுப்பினர்களுக்கு மதிப்பு சேர்க்கும் வகையில் குறிப்பிட்ட நிதியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் சமூகங்களுக்குள் அர்த்தமுள்ள இணைப்புகளை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
பிஷப் கல்லூரியின் அதிபர் செமலிகுணதிலக ஹேரத், இந்த முயற்சிக்கு தனது பாராட்டினை தெரிவித்தார், “ எமது கல்லூரியானது 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இவ்வேளையில் NDB போன்ற நம்பகமான வங்கியுடனான கூட்டு முயற்சியினை மேற்கொள்வது பரந்தளவில் உள்ள பிஷப் கல்லூரி சமூகமானது ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதிலும் பாடசாலைக்கு நன்மைகளை வழங்க உதவும். இது, எங்கள் இரண்டு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கும் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் முயற்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையின் மிகவும் கௌரவமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் பிஷப் கல்லூரியானது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடிய மன வலிமையுடைய பெண்களை வளர்த்து, தலைமுறை தலைமுறையாக ஒரு சிறந்த பாரம்பரியத்தை நிலைநிறுத்தியுள்ளது. NDB வங்கியுடனான இந்த பங்குடைமையானது , இந்த புகழ்பெற்ற சமூகத்தை ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பிஷப் கல்லூரிக்கான பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம், பிஷப் கல்லூரியின் பழைய மாணவர் வலையமைப்பின் செழுமையான பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் அதே வேளையில், புதுமையான நிதியியல் தீர்வுகள் மூலம் தனி நபர்களை வலுப்படுத்துவதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை NDB வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

