உலகம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Feb 26, 2025 - 09:14 AM -

0

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 

இந்திய நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.

 

முன்னதாக கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05