செய்திகள்
வீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் - மூவர் கைது

Feb 26, 2025 - 06:28 PM -

0

 வீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் - மூவர் கைது

வீதியின் அருகே ஒரு மாணவர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்கும் காணொளி சமீபத்தில் வலைத்தளங்களில் பரவியது. 

இந்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் 16 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் இன்று (26) கைது செய்யப்பட்டனர். 

கடந்த 20 ஆம் திகதி கேகாலை, பிடிஹும பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த தமுனுபொலவைச் சேர்ந்த மாணவர் மீது இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குழு ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏனைய இரண்டு சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (27) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05