Feb 26, 2025 - 10:44 PM -
0
கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களின் உயிரையும், பொலிஸ் அதிகாரிகளின் உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (26) கெரகல பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.