வணிகம்
இலங்கையில் சூரிய எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக DFCC வங்கி மற்றும் David Peiris Renewable Energy ஆகியன கைகோர்த்துள்ளன

Feb 27, 2025 - 08:53 AM -

0

இலங்கையில் சூரிய எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக DFCC வங்கி மற்றும் David Peiris Renewable Energy ஆகியன கைகோர்த்துள்ளன

தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மத்தியில் சூரிய எரிசக்தித் தீர்வுகளை உள்வாங்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்குடன், David Peiris Renewable Energy நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்டுள்ள மூலோபாய உடன்படிக்கை குறித்து DFCC வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில், புத்தாக்கமான மற்றும் நிலைபேற்றியல் கொண்ட எரிசக்தித் தீர்வுகள் மூலமாக, அவற்றைத் தீர்த்து வைப்பதில் முக்கியமான சாதனை மைல்கல்லினை இந்த ஒத்துழைப்பு குறித்து நிற்கின்றது. 

சூரிய எரிசக்தி என்பது உள்வாங்கப்பட வேண்டிய ஒன்றா அல்லது தேவையற்றதா என்ற விவாதத்திற்கு இனியும் இடமில்லை. பிரகாசமான மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு அது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. புதுப்பித்தக்கத்த மற்றும் சூழல் நேயமான மின்வலு மூலம் என்ற ரீதியில், படிம எரிபொருட்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்திற்குப் பங்களிப்பதற்கு உதவி, இலங்கையின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான சூரிய எரிசக்தி மாறியுள்ளது. 

சூரிய மின்சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் நோக்குடன், ஐந்து ஆண்டுகள் கொண்ட கடனை 11.50% என்ற சிக்கனமான, நிலையான வட்டி வீதத்தில் DFCC வழங்குவதுடன், இக்கடனை 10 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூரிய மின்னுற்பத்திக் கட்டமைப்பைப் பொருத்திக் கொள்வதற்கு ஆரம்பத்தில் முகங்கொடுக்க வேண்டிய செலவுகளை இயன்ற வரை குறைத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இக்கடன் தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட கால அடிப்படையில் சேமிப்புக்களுக்கு இடமளித்து, வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியான வகையிலும், அவர்கள் முற்கூட்டியே திட்டமிடக்கூடிய வகையிலும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்வதையும் உறுதி செய்கின்றது. 

தனிநபர்களும், வணிக நிறுவனங்களும் சூரிய எரிசக்தி தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு ஆதரவளிப்பதனூடாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளை சமூகங்கள் உள்வாங்கிக்கொள்வதற்கு DFCC வங்கி அவற்றுக்கு வலுவூட்டுகின்றது. இது பாரம்பரிய எரிசக்தி மூலங்களில் தங்கியிருப்பதை கணிசமான அளவில் குறைத்து, அதிகரிச்செல்லும் மின்சார செலவுகள் குறித்த சவால்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. 

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிப் பிரிவிற்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிலைபேற்றியல் மற்றும் சமூகத்திற்கு வலுவூட்டுதல் ஆகியவற்றின் மீது DFCC வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை David Peiris Renewable Energy நிறுவனத்துடனான எமது கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. சூரிய எரிசக்தித் தீர்வுகளுக்கு சிக்கனமான வழிகளில் கடன் வசதியை வழங்குவதனூடாக, சூழலில் நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்கும் அதேசமயம், தனிநபர்களும், வணிக நிறுவனங்களும் தமது எரிசக்திச் செலவுகள் மற்றும் காபன் அடிச்சுவட்டைக் குறைத்துக்கொள்ள உதவுவதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார். 

David Peiris Renewable Energy (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவர் ஜெயந்த ரத்நாயக்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் சூரிய எரிசக்தித் தீர்வுகளை அனைவரும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குவதற்கு DFCC வங்கியுடனான எமது ஒத்துழைப்பு எமக்கு இடமளிக்கின்றது. புதுப்பிக்கத்த எரிசக்தியை நோக்கி நாடு மாற்றம் காண்பதை விரைவுபடுத்துவதற்கு இக்கூட்டாண்மை உதவுவதுடன், சூழலுக்கு நன்மையளித்து, இலாபத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கு சமூகங்களும், வியாபாரங்களும் நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளைக் கைக்கொள்வதற்கு வலுவூட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார். 

நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மற்றும் சமூகத்திற்கு வலுவூட்டுதல் ஆகியவற்றில் தமக்கிடையில் பகிர்ந்துகொண்டுள்ள அர்ப்பணிப்பை DFCC வங்கி மற்றும் David Peiris Renewable Energy இடையிலான கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இந்த ஒத்துழைப்பின் மூலமான நோக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரித்த அளவில் பிரபல்யப்படுத்துவதற்காக, தனது சமூக ஊடக தளங்கள் மூலமாக அவற்றை முன்னெடுக்கும் முயற்சிகளை David Peiris Renewable Energy மேற்கொண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05