வணிகம்
Effie விருதுகள் 2024 இல் “NDB Talking Calendar” வெள்ளி விருதினை வென்றது

Feb 27, 2025 - 08:59 AM -

0

 Effie விருதுகள் 2024 இல் “NDB Talking Calendar” வெள்ளி விருதினை வென்றது

NDB வங்கியானது Effie விருதுகள் 2024 இல் தனது வெற்றியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது, அதன் அற்புதமான ஊடாடும் செயற்கை நுண்ணறிவு [AI] நாட்காட்டிக்காக வர்த்தகநாம அனுபவம் பிரிவில் கௌரவமிக்க வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது வாடிக்கையாளர் அனுபவத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் வங்கி அனுபவங்களின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதற்குமான வங்கியின் புதுமையான அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும். 

2024 ற்கான ஊடாடும் நாட்காட்டியானது, வாடிக்கையாளர் பயணத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பம் மற்றும் வங்கிச் சேவையை இணைப்பதில் NDB இன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. முன்னோக்கிச் சிந்திக்கும் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த நாட்காட்டியானது, தொழில்நுட்பம் மற்றும் வசதியின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கி, பாரம்பரிய வடிவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிவேக அனுபவத்தை பயனாளிகளுக்கு வழங்குகிறது. இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் உதவி துணை தலைவரும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவருமான தர்ஷன ஜயசிங்க, “இந்த விருதை வென்றது வங்கித் துறையில் இலக்கினை அடைவதற்கும் புதிய தரநிலைகளை அமைப்பதற்குமான எங்களின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஊடாடும் AI நாட்காட்டியானது , எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமைகளை உருவாக்கி, மாற்றியமைக்கும் அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த பணியினை செவ்வனவே மேற்கொண்ட குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Effie விருதுகள், சந்தைப்படுத்தல் செயல்திறனின் அடையாளமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விருதுகள் புத்தாக்கமான யுக்திகள் மூலம் விதிவிலக்கான முடிவுகளை வழங்கும் பிரசாரங்களை முன்னிலைப்படுத்துகிறது. வர்த்தகநாம அனுபவம் பிரிவில் NDB இன் வெற்றியானது, டிஜிட்டல் மாற்றத்தை தழுவி வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதில் அதன் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

NDB Talking Calendar என்பது ஒரு கருவி மட்டுமல்ல, புதிய எல்லைகளை ஆராய்வது, அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் டிஜிட்டல் வங்கியியல் துறையில் முன்னணியில் இருக்கும் அதன் நிலையை உறுதிப்படுத்தும் வங்கியின் நோக்கத்தின் உறுதியான அறிக்கையாகும். 

NDB வங்கியானது , நிதித்துறையில் ஒரு முன்னோட்டமாக தனதுநிலையினை பட்டியலிடுவதைத் தொடர்ந்து, இந்த மைல்கல் எல்லைகளைத் தாண்டவும் , தரங்களை உயர்த்தவும், இலங்கையில் வங்கிச் சேவையின் சாத்தியக்கூறுகளை மறுவரையறை செய்யவும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது. 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05