Feb 27, 2025 - 09:02 AM -
0
இலங்கையில் பாற்பொருட்கள் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாகத் திகழ்ந்து வருகின்ற Lanka Milk Foods (CWE) PLC நிறுவனம், அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படும் நாமமான, அம்பேவெல என்ற பிரபலமான வர்த்தகநாமத்தின் கீழ் ஒப்பற்ற புத்தம்புதிய மற்றும் தரம் கொண்ட தயாரிப்புக்களை வழங்கி வருகின்றது. மற்றுமொரு புத்தாக்கமான முயற்சியாக, அதன் சீஸ் தயாரிப்பு வரிசையை புதிய வடிவில் அம்பேவெல அண்மையில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. நுகர்வோரின் தேவைகள் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில், அவற்றை நிறைவேற்றும் வகையில் உயர் ரக தயாரிப்புக்களை வழங்கும் வகையில் இந்த புதிய அறிமுகம் அமைந்துள்ளது.
புத்தம்புதிய, நவீன தோற்றம் கொண்ட, மேம்பட்ட பொதியிடல் வடிவத்துடன் இடம்பெறுகின்ற இந்த மீள்அறிமுகமானது, இலங்கையில் அனைத்து இல்லங்கள் தோறும் மற்றும் தொழில்ரீதியான சமையல்கூடங்கள் தோறும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்களைக் கொண்டு வர வேண்டும் என்ற நிறுவனத்தின் குறிக்கோளுடன் ஒன்றியுள்ளது. வியப்பூட்டும் வேறுபட்ட தோற்றத்துடன் அம்பேவெல சீஸ் தயாரிப்பு வரிசை கிடைக்கப்பெறுவதுடன், அனைத்து சுவை வடிவங்கள் மற்றும் தருணங்களுக்கு தேவையானவற்றைக் கொண்டிருக்கும் வகையில் Edam, Gouda, Parmesan, Processed, Mozzarella, Paneer, மற்றும் Spread Cheese ஆகிய ஏழு வடிவங்களில் வெளிவருகின்றது. கட்டிகள், நீளமாக வெட்டப்பட்ட துண்டுகள் மற்றும் பரவல் வடிவம் ஆகிய தெரிவுகளில் கிடைக்கப்பெறுகின்ற அம்பேவல சீஸ் தயாரிப்பு வரிசை, அழகிய தோற்றம் கொண்ட புதிய வடிவமைப்பில், பாவனைக்கு இலகுவான பொதியிடல் முறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பரந்துபட்ட நுகர்வோர் மத்தியில் அதிகரித்துச்செல்லும் விருப்புவெறுப்புக்களை நிறைவேற்றும் வகையில், பல்வேறுபட்ட புதிய சீஸ் வடிவங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேவெல நியூசிலாந்து பண்ணையின் தனித்துவமான தயாரிப்பான 200 கிராம் பதப்படுத்தப்பட்ட சீஸ் தயாரிப்பானது, அருமையான சுவை அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பாரம்பரியமான குடிசைக் கைத்தொழில் முறையில் சீஸ் தயாரிக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரபலமான Gouda சீஸ் உருண்டைகள் தற்போது தூய்மையான மற்றும் சுவையூட்டப்பட்ட வகைகளாக வெளிவருகின்றன. இதில் மிளகு, சீரகம், மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியன அடங்கியுள்ளதுடன், சீஸ் பிரியர்களுக்கு வியப்பூட்டும் தெரிவுகளை வழங்குகின்றது.
இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சசங்க பெரேரா அவர்கள் புதிய வடிவில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்ற தமது சீஸ் தயாரிப்பு வரிசை குறித்து கருத்து தெரிவிக்கையில், “உயர் தரம் கொண்ட உள்ளூர் தயாரிப்புக்களை ஊக்குவித்து, இலங்கையில் பால் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது எப்போதும் எமது குறிக்கோளாகக் காணப்படுகின்றது. இப்புதிய வடிவிலான அறிமுகமானது புத்தாக்கம் மற்றும் தேசிய அளவில் தேவையை பூர்த்தி செய்யும் அதேசமயம், இறக்குமதிகளில் தங்கியிருப்பதைக் குறைப்பதில் நாம் காண்பித்துவரும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. புதிய வடிவமைப்பிலான பொதியிடல் மற்றும் புதிய சேர்க்கைகள் கொண்ட இந்த சீஸ் தயாரிப்பு வரிசை மூலமாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, உலகத்தரம் வாய்ந்த பாலுற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் தற்போது சுவைத்து மகிழ முடியும். தமக்கு மிகவும் பரிச்சயமான சௌகரியமான உணவுகளானாலும் சரி, அல்லது சுவையான சீஸ் அடங்கிய உணவு வகைகளானாலும் சரி, தற்போது அனைவருக்கும் ஏற்ற தயாரிப்பு வரிசையை நுகர்வோர் எதிர்பார்க்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள முன்னணி பாற்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்ற ரீதியில், அம்பேவெல மற்றும் பட்டிபொல ஆகிய இடங்களில் அம்பேவெல நிறுவனத்தின் மலைநாட்டுப் பண்ணைகள் அமைந்துள்ளதுடன், மிகவும் உகந்த சூழலில் வளர்க்கப்படுகின்ற பசுக்களிலிருந்து பெறப்படுகின்ற பாலைக் கொண்டு உயர் தர பாற்பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. மகத்துவம் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது அர்ப்பணிப்புக் கொண்டுள்ள இந்த வர்த்தகநாமமானது தூய்மை, ஊட்டச்சத்து மற்றும் தலைசிறந்த சுவை ஆகியவற்றுக்குப் பெயர்பெற்று விளங்குகின்ற தயாரிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. பண்ணையிலிருந்து, உணவு மேசை வரை அனைத்திலும் தரம் என்பது அம்பேவெல நிறுவனத்தின் அணுகுமுறையில் ஆழமாக வேரூன்றியுள்ளதுடன், தயாரிப்புத் தொழில்முறையின் ஒவ்வொரு படியும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, அதியுயர் தராதரங்கள் பேணப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. பசுமையான மேய்ச்சல் புற்தரைகள் முதல் அதிநவீன உற்பத்தித் தொழில்முறை பின்பற்றப்படல் வரை, புத்தம்புதிய, பாதுகாப்பான, மற்றும் மிகவும் ஊட்டச்சத்து மிக்க பாற்பொருள் தயாரிப்புக்கள் மாத்திரமே நுகர்வோரின் கைகளுக்கு கிடைப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி வருகின்றது.

