Header Logo

வணிகம்
இந்தியாவின் வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் மற்றும் DRDO ஏரோ இந்தியா 2025இல் அறிமுகப்படுத்தின

Feb 27, 2025 - 09:09 AM -

0

இந்தியாவின் வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் மற்றும் DRDO ஏரோ இந்தியா 2025இல் அறிமுகப்படுத்தின

அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் (Adani Defence & Aerospace) நிறுவனம் , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் இணைந்து, இந்தியாவின் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் வாகனங்களில் பொருத்தக்கூடிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை இன்று ஏரோ இந்தியா 2025இல் அறிமுகப்படுத்தியது. இத்தளத்தை, DRDOவின் பொது இயக்குனர் (மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் அமைப்பு) Dr.B.K.தாஸ், DRDOவின் மதிப்பிற்குரிய விருந்தினர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தொழில்துறை பங்காளர்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தார். இது உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

DRDOவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, அதிகரித்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. நவீன போரில் உளவு பார்த்தல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் இரண்டிற்கும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், வலுவான ட்ரோன் எதிர்ப்பு பொறிமுறையின் தேவை கட்டாயமாகிவிட்டது. வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நீண்ட தூர பாதுகாப்பு, விரைவு மற்றும் துல்லியத்தை உறுதி செய்வதால் இது நவீன பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு பலமான சொத்தாக அமைகிறது. இது மேம்பட்ட உணரி (sensor) திறன்கள் ஊடாக ட்ரோன்களை தானாகக் கண்டறிதல், வகைப்படுத்தல் மற்றும் நடுநிலைப்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் உயர் பாதுகாப்பை வழங்குகிறது. 

4x4 வாகனம் ஒன்றில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அமைப்பு, மிகவும் அசையக்கூடிய, விரைவான, நம்பகமான மற்றும் தன்னிறைவான ட்ரோன் எதிர்ப்பு தீர்வை வழங்குகிறது. இது துல்லியமான ட்ரோன் நடுநிலைப்படுத்தலுக்காக உயர் ஆற்றல் மிக்க லேசர் அமைப்பை பயன்படுத்துகிறது. வான்வழி அச்சுறுத்தல் ஈடுபாட்டிற்கான 7.62மிமீ துப்பாக்கி, மற்றும் 10கிமீ வரம்பிற்குள் நிகழ்நேர இலக்கு கையகப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் நடுநிலைப்படுத்தலுக்காக மேம்பட்ட radar, SIGINT, இலக்ட்ரோ-ஒப்டிகல் உணரிகள் மற்றும் குறுக்கீட்டழிப்பிகளைக் (jammers) கொண்டுள்ளது. பல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பது, விரைவு மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதுடன் இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய சொத்தாக அமைகிறது. 

நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி, “இந்த வெளியீடு, DRDOவின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற (ToT) கட்டமைப்பால் இயக்கப்படும் இந்தியாவின் பாதுகாப்பு புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பின் வெற்றிக்கு ஒரு சான்றாகும். வளர்ந்து வரும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நமது ஆயுதப் படைகளின் திறனை வலுப்படுத்துவதில் DRDOவின் அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்கு தயாரான தீர்வாக மொழிபெயர்ப்பதில் அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.எங்கள் மேம்பட்ட உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க, மிகவும் மேம்பட்ட, உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை எங்கள் ஆயுதப் படைகள் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் திடமாக உள்ளோம். என்றார். 

DRDOவின் பொது இயக்குனர் (மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் அமைப்பு) Dr. B.K.தாஸ் மேலும் கூறுகையில், வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதில் வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பின் அறிமுகம் ஒரு முக்கியமான படியாகும். இந்த அமைப்பு பல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை உயர் மொபைல் தளத்தில் ஒருங்கிணைத்து, விரைவான பதிலையும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையையும் உறுதி செய்கிறது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய தொழில்துறையுடன் இணைந்து உள்நாட்டில், அடுத்த தலைமுறை தீர்வுகளை உருவாக்குவதற்கு DRDO தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான ட்ரோன்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை வழங்கி பொதுமக்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார். 

இந்த அமைப்பின் அறிமுகம், அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே மேம்படுத்துதல், இறக்குமதிகளில் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. ஆளில்லா வான்வழி அச்சுறுத்தல்கள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் மற்றும் DRDO இடையேயான பங்காளித்துவம், உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தீர்வுகளுடன் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை முன்னேற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. 

விண்வெளி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய தளமாக ஏரோ இந்தியா 2025 செயற்படுகிறது. மேலும் இந்த அமைப்பின் வெளியீடு உலகளாவிய பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக நாட்டின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் தொடர்பாக 

அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ், அதிநவீன பாதுகாப்பு தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. ஆத்மநிர்பர் பாரத் முயற்சியை ஆதரிப்பதிலும், தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

ஏற்றுமதி சார்ந்த மனநிலை, சிறந்த செயல்முறைகள் மற்றும் தர முகாமைத்துவ அமைப்புகளுடன் கூடிய தொடக்க நிறுவனங்கள் மற்றும் MSME-கள் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் நிறுவியுள்ளோம். சேவை செய்பவர்கள் முன்கூட்டியே எந்தவொரு அசம்பாவிதங்களுக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

Website: www.adanidefence.com

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title