Feb 27, 2025 - 09:52 AM -
0
நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பெறுமதி, நம்பகமான மற்றும் நிகரற்ற இணைப்புத்திறனை வழங்கும் SLT-MOBITEL, Fibre வேக அடிப்படையிலான அன்லிமிடெட் டேட்டா பக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது.
நுகர்வு போக்குகளின் அடிப்படையில், SLT-MOBITEL இன் Fibre வேக அடிப்படையிலான அன்லிமிடெட் பக்கேஜ்களினூடாக 100Mbps முதல் 1000Mbps வரையான வேகங்கள் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு சிக்கல்களில்லாத இணையப் பாவனை, ஸ்ட்ரீமிங், வீடியோ கொன்பிரென்சிங், ஒன்லைன் கேமிங் போன்றவற்றை பெரிய கோப்புகளை சுலமாக மற்றும் துரிதமாக டவுன்லோட் செய்து மேற்கொள்ள முடியும்.
SLT-MOBITEL இன் மேம்படுத்தப்பட்ட இணைப்புத்திறனினூடாக, பாவனையாளர்களுக்கு தமது இணைய அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கையின் இணைப்புத்திறன் சந்தையில் புதிய நியமத்தை ஏற்படுத்தி, SLT-MOBITEL இன் வேக அடிப்படையிலான அன்லிமிடெட் பக்கேஜ்கள், அதிகரித்துச் செல்லும் அதி-வேக, தடங்கலில்லாத இணைய அணுகலுக்கான வாய்ப்பை வழங்குகின்றது. இந்த பக்கேஜ்கள் பரந்தளவு வேக கட்டமைப்புகளைச் சேர்ந்த பாவனையாளர் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், ஒப்பற்ற பிரவுசிங், மிருதுவான ஸ்ட்ரீமிங் மற்றும் தடங்கலில்லாத கேமிங் போன்றவற்றை உறுதி செய்கின்றன. வேகத்துக்கு மேலதிகமாக, புதிய பக்கேஜ்களினால் மேம்படுத்தப்பட்ட தங்கியிருக்கும் திறன், சிறந்த ஒன்லைன் அனுபவத்துக்கான மேம்படுத்தப்பட்ட லேடென்ஸி போன்றனவும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சியான டேட்டாவையும் அனுபவிக்க முடியும். அதனூடாக தடங்கல்களில்லாத வீடியோ அழைப்புகள், செல்லுமிடங்களிலிருந்து பணியாற்றல் மற்றும் e-பயிலல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், SLT- MOBITEL இனால் parental controls, Wi-Fi optimization மற்றும் bundled entertainment தெரிவுகள் போன்றன வழங்கப்பட்டு, நவீன வாழ்க்கை முறைக்கு பொருத்தமானதாக இந்த பக்கேஜ்கள் அமைந்துள்ளன. SLT-MOBITEL’இன் சிறந்த Fibre தொழினுட்பத்தினூடாக, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனுபவம் அதிவேக இணைய இணைப்புகள், ஒப்பற்ற தங்கியிருக்கும் திறன் மற்றும் சிறந்த வினைத்திறன் போன்றன வழங்கப்படுகின்றன. SLT-MOBITEL Fibre இணைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு தெளிவான வீடியோ அழைப்புகள், buffer-free 4K ஸ்ட்ரீமிங் மற்றும் ஒப்பற்ற கிளவுட் கேமிங் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். மேலும், fibre இன் உயர் வலையமைப்பு திறனினூடாக, உச்சகட்ட பாவனை நேரத்தில் தொடர்ச்சியான வினைத்திறன் வழங்கப்படுவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் இல்லங்களுக்கான சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.
களிப்பூட்டும் ஸ்ரீரிமிங் அம்சங்கள், ரிமோட் பயிலல், வீட்டிலிருந்து பணிபுரிதல் அல்லது ஒன்லைன் கேமிங் என ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு சிறந்த வலையமைப்பை பக்கேஜ்கள் வழங்குகிறது. நவீன டிஜிட்டல் வாழ்க்கை முறைகளுக்கு ஒப்பற்ற இணைப்புத்திறன் உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தமது பக்கேஜ்களை சுலபமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் அல்லது புதிய இணைப்புகளை SLT-MOBITEL இன் பாவனையாளருக்கு நட்பான MySLT app ஊடாக அல்லது நாடு முழுவதையும் சேர்ந்த எந்தவொரு SLT-MOBITEL கிளைக்கும் விஜயம் செய்து மேற்கொள்ள முடியும். புதிய வாடிக்கையாளர்கள் www.sltmobitel.lk ஊடாக தமது இணைப்பு கோரிக்கைகளை மேற்கொள்ள முடியும். புதிய அன்லிமிடெட் டேட்டா பக்கேஜ்கள் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு அல்லது உதவிகளுக்கு வாடிக்கையாளர்கள் எனும் இணையத்தளத்தை பார்வையிடலாம் அல்லது 24/7 ஹொட்லைன் இலக்கத்துடன் 1212 உடன் தொடர்பு கொள்ளலாம்.

